TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க

TN Village Assistant Recruitment 2025

TN Village Assistant Recruitment 2025:

TN Village Assistant Recruitment 2025 என்று கூகுளில் நீங்கள் தேடி இருந்தால் உங்களுக்கான சரியான இடம் தான் இது…

தமிழ்நாட்டில் உள்ள கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்குக் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட இணையதளங்களிலிருந்து pdf வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து அந்தப் பணிக்கு நீங்கள் தகுதி உடையவரா எனத் தெரிந்து கொண்டு இறுதி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி மற்றும் இதர மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க எங்கள் Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Tamil Nadu village Assistant பணிக்கு மாவட்ட வாரியான காலியிடங்கள், விண்ணப்ப படிவம் pdf மற்றும் விண்ணப்பிக்க இணைப்பு:

Tamilnadu Village Assistant Recruitment Job Openings 2025:

மாவட்டம்காலியிடங்கள்தகுதிஇறுதி தேதி இணைப்பு
செங்கல்பட்டு1010th05.08.2025இணைப்பு
ஈரோடு13410th05.08.2025இணைப்பு
அரியலூர் 10th05.08.2025இணைப்பு
சென்னை10th05.08.2025இணைப்பு
கோயம்புத்தூர்6110th18.08.2025இணைப்பு
கூடலூர்10th05.08.2025இணைப்பு
தர்மபுரி 3910th20.08.2025இணைப்பு
திண்டுக்கல்10th05.08.2025இணைப்பு
கள்ளக்குறிச்சி10th05.08.2025இணைப்பு
கன்னியாகுமரி10th05.08.2025இணைப்பு
காஞ்சிபுரம்10910th06.08.2025இணைப்பு
கரூர்10th05.08.2025இணைப்பு
கிருஷ்ணகிரி3310th12.08.2025இணைப்பு
மதுரை10th05.08.2025இணைப்பு
மயிலாடுதுறை 1310th05.08.2025இணைப்பு
நாகப்பட்டினம் 10th05.08.2025இணைப்பு
நாமக்கல் 6710th16.08.2025இணைப்பு
நீலகிரி10th05.08.2025இணைப்பு
பெரம்பலூர்2110th05.08.2025இணைப்பு
புதுக்கோட்டை 10th05.08.2025இணைப்பு
ராமநாதபுரம்10th05.08.2025இணைப்பு
ராணிப்பேட்டை4310th06.08.2025இணைப்பு
சேலம்10510th07.08.2025இணைப்பு
சிவகங்கை 10th05.08.2025இணைப்பு
தென்காசி2410th12.08.2025இணைப்பு
தஞ்சாவூர் 10th05.08.2025இணைப்பு
தேனி 10th05.08.2025இணைப்பு
திருப்பத்தூர்10th05.08.2025இணைப்பு
திருவாரூர்10th05.08.2025இணைப்பு
தூத்துக்குடி 7710th03.08.2025இணைப்பு
திருநெல்வேலி3710th16.08.2025இணைப்பு
திருப்பூர்2510th08.08.2025இணைப்பு
திருவள்ளூர் 15110th22.08.2025இணைப்பு
திருவண்ணாமலை10310th05.08.2025இணைப்பு
திருச்சி1510th21.08.2025இணைப்பு
வேலூர்3010th12.08.2025இணைப்பு
விழுப்புரம்10th05.08.2025இணைப்பு
விருதுநகர் 3810th19.08.2025இணைப்பு

தற்போது சில மாவட்டங்களில் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மற்ற மாவட்டங்களில் அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்ப இணைப்பு கொடுக்கப்படும்.

Read More  Tiruvallur District Village Assistant Recruitment 2025 | திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 151 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

வருவாய்த் துறை கல்வி தகுதி வரம்புகள்:

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • வேட்பாளர்கள் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை, காலியிடம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

வயது வரம்பு :

UR21 to 32
BC/MBC/SC/SCA/ST21 to 37
PWD21 to 42

கிராம உதவியாளருக்கான மாத ஊதியம்:

ரூ.11100 முதல் 35100 வரை.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு

இதர தகுதிகள்:

வசிப்பிடம், மிதி வண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன், தமிழில் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன், நேர்காணல் ஆகியவைகளுக்கு தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு காலிப் பணியிடங்களுக்குப் பணிநியமனம் செய்யப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நாளன்று உடற்தகுதி சான்றிதழினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் அடிப்படை விதிகளுள் விதி-10-ன்படி சமர்ப்பித்தல் வேண்டும்.

தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அழைப்புக்கடிதம் பெறுவது மட்டுமே பணி நியமனத்திற்கான ஆணையெனக் கருதப்பட மாட்டாது.

பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு எனக் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றுகள் சரிபார்க்கப்படும். ஆவண நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

வாசித்தல் மற்றும் எழுதும் திறனறித்தேர்விற்கும், நேர்முகத்தேர்விற்கும் உரிய நாள் குறிப்பிட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியே கடிதம் அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 07/07/2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதிதேர்வுத் தேதி
தேர்வு தேதி22/09/2025
நேர்காணல் தேதி20.09.2025 முதல் 26.09.2025 வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *