வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, voter ID, how to apply voter ID online

இந்திய தேர்தல் ஆணையம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு நிலையிலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பும் அனுப்பப்படும்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்களுடைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை பயன்படுத்தி கேப்சாவை உள்ளிடவும்.
  • பெயரை டைப் செய்து கணக்கை உருவாக்கவும்.கடவுச்சொல்லை பதிவு செய்து உறுதிப்படுத்தவும், பின்னர் OTP ஐ கோரவும்.
  • நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.பின்பு தொடர OTP ஐ சரியாக உள்ளிடவும்.
  • புதிய வாக்காளர் பதிவுக்கு படிவம் 6 ஐ நிரப்பி க்ளிக் செய்து உங்கள் தனிப்பட்ட, தொடர்பு மற்றும் முகவரி விபரங்களை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவு செய்து பின்பு பிழைகளை கண்டறிந்து சரி செய்து உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, சமர்ப்பிக்க வேண்டும்.
Read More  மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

Leave a Comment