ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு:

Train ticket fares to increase across the country from July 1, இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு

இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும் இக்கட்டண உயர்வு ஜூலை 01 முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இரயில்வே இணைக்கிறது.நீண்ட தூர பயணங்களுக்கு படுக்கை வசதி, டாய்லெட் வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் மக்கள் இரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர்.

டிக்கெட் விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் ரயிலை தேர்வு செய்ய மற்றொரு காரணமாக உள்ளது.இதற்கிடையே ஜூலை 01 முதல் இரயில் கட்டணம் உயர்த்தபடுவதாக இரயில்வே அறிவித்துள்ளது.

அதேநேரம் குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தொலைதூர பயணங்கள் மற்றும் ஏசி வகுப்புகளுக்கு டிக்கெட் விலை உயர்கிறது.

இரண்டாம் வகுப்பில் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் கட்டண உயர்வு கிடையாது.அதேசமயம் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய டிக்கெட் கட்டண உயர்வு உண்டு.

ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு உயர்கிறது?

ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா என்ற விதத்தில் கட்டணம் உயர்வு படுத்தப்படுகிறது.அதாவது 500 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 01 பைசா உயர்த்தப்படும்.எடுத்துக்காட்டாக 2000 கிலோமீட்டர் தூர பயணத்துக்கான டிக்கெட் விலையில் முன்பைவிட 20 ரூபாய் அதிகரிக்கும்.

ரயிலில் ஏசி கோச்களுக்கு டிக்கெட் கட்டணம் எவ்வளவு உயர்கிறது?

இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் எப்படி 500 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு பைசா உயர்ந்ததோ அதேபோல் ஏசி கோச்சிகளில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் இரண்டு பைசா விகிதம் உயர்த்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆயிரம் கிலோமீட்டர் உள்ள தூரம் பயணத்திற்கு 20 ரூபாய் கட்டணம் உயரும்.

யாருக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை?

புறநகர் ரயில்களில் அதாவது (சென்னை மும்பை கொல்கத்தா) உள்ளிட்ட புறநகர் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் சென்று வர பயன்படுத்தும் வார மற்றும் மாதாந்திர சீசன் பாஸ்களை பயன்படுத்துவோருக்கும் டிக்கெட் விலை உயராது.

Read More  மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

Leave a Comment