
தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளின் போது மின் வினியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும் மற்றும் பழுதடைந்த மின் உபகரணங்கள் ஆகியவை சரி செய்யப்பட்டு சீரான மின் வினியோகம் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் மின்தடை செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை (மே-18) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை செய்யப்பட மாட்டாது.நாளை வார விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் தேவை கருதி தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.