
24/7, 365 நாட்கள் ஏசி ஓடினாலும் அதிகமாக கரண்ட் பில் வருமோ என்று இனி கவலைபட தேவையில்லை.தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) எளிய யோசனை வழங்கியுள்ளது.
கோடை காலங்களில் ஏசியின் பயன்பாடு அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.மேலும் மின்சார வாரியம் ஒரு சில எளிய வழிமுறையை பயன்படுத்தும் போது மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக, பலர் தங்களது A/C ன் வெப்பநிலையை 18°c கீழ் வைத்து பயன்படுத்துகின்றனர்.இந்த குறைந்த வெப்பநிலை பராமரிக்க ஏசி அதிக நேரம் இயங்க வேண்டும்.இதனால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது.
மாறாக ஏசி யின் வெப்பநிலையை 26°c க்கு மேல் வைக்கும் போது ஏசி குறைவான நேரமே இயங்கும் என்பதால் A/C -ன் வெப்பநிலையை 24°c முதல் 26°c வரை வைத்திருப்பது மின்சாரத்தை சேமிக்க கூடிய சிறந்த வழி என்று மின்சார வாரியம் (TNEB) தெரிவித்துள்ளது.
மேலும் ஏசியின் வெப்பநிலையை ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போதும் மின்சார பயன்பாடு சுமார் 6% வரை குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.