
தங்கமயில் டிஜி கோல்ட் திட்டம்:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் தங்கம் என்பது எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் உள்ளனர்.
தங்கம் வாங்குவதில் பலர் செய்யும் தவறு, பவுன் கணக்கில் வாங்க வேண்டும் என நினைப்பதுதான்.அப்படி நினைக்கும் போது விலை அதிகமாக இருப்பதால் அது கடினமாக தெரியும்.
ஆனால் இந்த பதிவில் நாங்கள் கூறும் சேமிப்பு திட்டம் மூலம் தினமும் சேமித்து 11 மாதங்கள் கழித்து சேமித்த நகையை பெற்று கொள்ளலாம் என்பது இப்போது பலருக்கும் தெரியாது.
அப்படி ஒரு அருமையான திட்டம் தான் தங்கமயில் நிறுவனத்தின் டிஜி கோல்ட் (Digi Gold) திட்டம்.இத்திட்டத்தில் தினசம்பளம் வாங்குவோரும், மாத சம்பளம் வாங்குவோரும் தங்களது வருமானத்தில் 10% முதல் 20% வரை தினமுமோ அல்லது மாதமோ சேமித்து பயனடையலாம்.
இத்திட்டத்தின் சிறப்பு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.அது மட்டுமல்லாமல் அன்றைய தங்கத்தின் விலையில் முதலீடு செய்ய முடியும்.
மேலும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 5 ரூபாய் வரை முதல் 76 நாட்களுக்கும், 77 முதல் 151 நாட்களுக்கு 3.75 ரூபாயும், 152 முதல் 226 நாட்களுக்கு 2 ரூபாயும், 227 முதல் 301 நாட்களுக்கு 0.75 ரூபாயும் சலுகையாக உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிறகு 30 நாட்கள் கழித்து கணக்கை முடித்து ஆன்லைனில் அல்லது உங்களுக்கு அருகில் நீங்கள் தேர்வு செய்த ஷோரூமில் சென்று நகையாகவோ அல்லது நாணயமாக பெற்று கொள்ளலாம்.
தங்கமயில் Digi Gold Scheme – ல் இணைவது எப்படி?
- முதலில் https://app.thangamayil.com/7jy1/jwps7q5r இந்த இணைப்பில் சென்று தங்கமயில் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்து OTP ஐ பதிவிட வேண்டும்.
- பின்பு முகவரியை ஆதார் அட்டையில் உள்ளது போல் பதிவு செய்து உங்களுக்கு அருகில் உள்ள தங்கமயில் ஷோரூமை தேர்வு செய்து டிஜி கோல்ட் திட்டத்தை திறக்கலாம்.
குறிப்பு:
திட்டத்தை முடிக்கும் போது உங்களுடைய ஆதார் அட்டையை கொண்டு சென்று நகையை பெற்று கொள்ளலாம்.