
தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது:

நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தகராறில் முன்னால் அதிமுக உறுப்பினர்களான பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் தொடர்பு இருப்பதர்கான ஆதாரங்களை போலிஸார் கண்டுபிடித்தனர்.
அடுத்தடுத்த விசாரணையில் போதைப்பொருள் சப்ளையர் என்று கூறப்படும் பிரதீப் குமார் மற்றும் ஜான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களிடம் இருந்து 11 கிராம் கோகைன் கைப்பற்றப்பட்டது.
மேலும் இந்த போதைப்பொருள் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.இந்த விசாரணையில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தை போலிசார் வழக்கில் தொடர்பு படுத்தினர்.
பிரதீப் குமார், பிரசாத் என்பவருக்கு கோகைனை வழங்கியுள்ளார், பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்துக்கு விற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜூன் 23 திங்கட்கிழமை நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்தத்தில் போதைப் பொருள் பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கோகைனை ரூ.12,000 க்கு வாங்கி பயன்படுத்தியதாக பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.