தமிழ்நாடு அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

How to Apply for Tamilnadu Government Jobs in 2025

Table of Contents

How to Apply for Tamilnadu Government Jobs 2025:

தமிழ்நாடு அரசு வேலை என்பது பலருக்கும் ஒரு நிலையான வாழ்க்கை வழங்கும் ஒரு கனவு. மாதம் ஒரு நிலையான சம்பளம், பணி பாதுகாப்பு, ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல நன்மைகள் இதனுடன் தொடர்புடையது. ஆனால் பலருக்கும் ஒரு குழப்பமாக இருக்கிறது அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்த முழுமையான கட்டுரையில் அரசு வேலைவாய்ப்புக்கு எப்படி தயாராக வேண்டும், எந்தெந்த தளங்களில் வேலை வாய்ப்புகள் வெளியாகின்றன. விண்ணப்பிக்கும் முறை என்ன என்பதை முழுமையாக காண்போம்.

அரசு வேலைவாய்ப்புகளைத் தேடும் முறை:

TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்)

அரசுத் துறைகளில் பெரும்பாலான வேலைகளை நிரப்புவதற்காக TNPSC தேர்வுகளை நடத்துகிறது.

  • பிரபலமான தேர்வுகள்: Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Technical Services.
  • இணையதள முகவரி: tnpsc.gov.in

TNRD,TRB, TNTET, TNUSRB, TNMRB

இதில் ஆசிரியர் வேலை, மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடைபெறும்.

  • Tamilnadu Uniformed Service Recruitment Board – காவல்துறை வேலைகள்
  • Tamilnadu Teachers Recruitment Board – ஆசிரியர் பணிக்கான தேர்வுகள்
  • TNTET – ஆசிரியர் தகுதித் தேர்வு
  • Tamilnadu Rural Development- ஊரக வளர்ச்சி துறை வேலைகள்
Read More  போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எங்கே பார்க்கலாம்?

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

துறைஇணையதள முகவரி
TNPSChttps://www.tnpsc.gov.in/
TRBhttps://trb.tn.nic.in/
TNUSRBhttps://tnusrb.tn.gov.in/
TNMRBhttps://www.mrb.tn.gov.in/
Employment Exchangehttps://tnvelaivaaippu.gov.in/Empower/

வேலைவாய்ப்பு வலைதளங்கள்

விண்ணப்பிக்கும் முறைகள் (Steps to Apply)

ONE Time Registration (OTR)

  • TNPSC அல்லது TNUSRB போன்ற தளங்களில் முதலில் ஒரு முறையிலான பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, முகவரி, ஆதார் புகைப்படம், கையொப்பம் போன்ற விபரங்களை பதிவேற்ற வேண்டும்.

புதிய அறிவிப்பு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

  • உங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகவும் கவனமாகவும் படிக்கவும்.
  • தகுதி மற்றும் வயது வரம்பு சரிபார்க்கவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் (SC/ST/PWD -க்கு கட்டணம் விலக்கு இருக்கலாம்).
  • என்ன பத்தி சமர்ப்பித்து Acknowledgement வைத்துக் கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்

  • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
  • டிகிரி/டிப்ளமோ சான்றிதழ்.
  • அடையாள அட்டை- ஆதார், வாக்காளர் அடையாள அட்டை.
  • புகைப்படம் மற்றும் கையொப்பம்.
  • சாதி சான்றிதழ் (ஒப்பந்த நிலை வேலைகளுக்கு).
  • மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவைப்பட்டால்).

தேர்வு செயல்முறை (Selection Process)

பொதுவாக தேர்வுகள் கீழ்கண்ட கட்டங்களில் நடைபெறும்.

  • எழுத்து தேர்வு (prelims & Main)
  • முன்னோட்ட தேர்வு – சில Non-technical பதவிக்கு மட்டும்
  • வாய்மொழி தேர்வு/சமூக அறிவு/Interview
  • certificate verification
  • final selection & posting

பாடப்பிரிவுகள்

  • பொது அறிவு
  • சமூக அறிவு
  • தமிழ் மொழி
  • Aptitude & Mental ability
  • தொழில்நுட்பத் துறை சார்ந்த பாடங்கள் (Engineering, ITI)

படிப்பு வழிகாட்டிகள்

  • சமச்சீர் பாட புத்தகங்கள் (6-12)
  • TNPSC கையேடுகள்
  • online resources – YouTube, websites, mobile app

தேர்வுக்கான செயல்முறை

  • தினசரி Current Affairs
  • மாத இதழ்கள் – பொது அறிவு உலகம், தினமலர் Job Supplement
  • வெந்தய வருட கேள்வித்தாள்களை படித்து பயிற்சி செய்யவும்

வயதுவரம்பு மற்றும் தகுதி

தேர்வு வகைவயதுவரம்புகல்வி தகுதி
Group 418-3210ம் வகுப்பு
Group 2A18-30any degree
VAO21-3010ம் வகுப்பு
TNUSRB18-2412ம் வகுப்பு/Any Degree
TRB21-40B.Ed + Degree

SC/ST/PWD/MBC ஆகியோருக்கு வயதில் சலுகை உண்டு.

வேலைக்கு சேர்ந்த பின் பெரும் நன்மைகள்

  • நிலையான சம்பளம்
  • ஓய்வு நலன்கள்
  • மருத்துவ காப்பீடு
  • வயதிற்குரிய பதவி உயர்வு வாய்ப்பு
  • விடுமுறை சலுகைகள்
Read More  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது | TN 10th Result 2025 Out...

அரசு வேலைவாய்ப்பு குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ள telegram மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள்

குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலை என்பது ஒவ்வொருவர் தமிழரின் கனவாக இருக்கிறது. ஆனால் அந்த கனவை நிஜமாக்குவது உங்கள் முயற்சி மற்றும் சரியான திட்டமிடலால் மட்டுமே சாத்தியம். தினசரி பயிற்சி, மாதிரி தேர்வுகள் மற்றும் நம்பிக்கை என்ற மூன்று தொகுதிகள் தான் நிச்சயம் எங்கள் அரசு பணியில சேர முடியும்.

ஆம் செலுத்த வேண்டும். பொது பிரிவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் SC/ST/PWD க்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

உங்கள் ஆவணங்களை தயாராக வைத்திருங்கள். Medical Test & Document Verification நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *