Tenkasi District Village Assistant Recruitment 2025:
Job Vacancy in Tenkasi என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 24 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.tenkasi.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 12/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
TN Village Assistant Job Details:
| நிறுவனத்தின் பெயர் | தென்காசி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| மொத்த காலி பணியிடங்கள் | 24 Village Assistant Post |
| வேலை இடம் | தென்காசி மாவட்டம் |
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 14/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 12/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.Tenkasi.nic.in |
தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
Job Vacancy in Tenkasi (Taluk Vice):
| 1. | தென்காசி தாலுகா – 02 |
| 2. | ஆலங்குளம் தாலுகா – 05 |
| 3. | சிவகிரி தாலுகா– 03 |
| 4. | கடையநல்லூர் தாலுகா – 04 |
| 5. | திருவேங்கடம் தாலுகா – 01 |
| 6. | செங்கோட்டை தாலுகா – 03 |
தமிழ்நாடு கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
- பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
| 1. | UR – 21 முதல் 32 வரை |
| 2. | BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை |
| 3. | PWD – 21 முதல் 42 வரை |
கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:
விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 14/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 12/08/2025 மாலை 05:45 மணிவரை |
| தேர்வு நடைபெறும் தேதி | 17/09/2025 முதல் 23/09/2025 வரை |
| நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி | 09/10/2025 முதல் 15/10/2025 வரை |
தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இணைப்புகள்:
| தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு | இங்கே தொடவும் |
| கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்பு | இங்கே தொடவும் |