
10th,11th Exam Result Date 2025 TamilNadu:
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான 10 வது வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரையும், 11 வகுப்புகான தேர்வுகள் மார்ச் 05 முதல் 27 வரையிலும் நடைபெற்றது.
தற்போது இந்த இரண்டு வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு மே 16, வெள்ளிக்கிழமை காலையும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அன்று மதியமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
How to Check TN 10th, 11th Result 2025?
- முதலில் dge.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு இணையதளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் “TN SSLC Result 2025” என்ற இணைப்பிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் “TN Class 11 Result 2025” என்ற இணைப்பிலும் செல்ல வேண்டும்.
- பிறகு பதிவு எண் (Registration number) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை தெரிந்து கொள்ளலாம்.