மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

New Annual FASTag Scheme:

New Fastag Scheme, Fastag

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (18/06/2025) புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டத்தை துவங்கி வைத்தார்.

இந்த புதிய ஃபாஸ்டேக் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இத்திட்டத்தின் மூலம் ஒரு வருட சுங்க செலவு 10,000 விருந்து 3,000 ஆக குறையும் என்றும், மேலும் இத்திட்டத்தால் பயனர்களின் நிதிச் சுமை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய ஃபாஸ்டேக் நடைமுறை: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை?

Annual Fastag:

இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டத்தின் பாஸ் 3,000 ஆகும்.இத்திட்டத்தில் ஒரு ஆண்டுக்குள் 200 சுங்கச்சாவடிகளை கடக்கும் வசதியை இந்த புதிய திட்டம் வழங்கும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சுங்க சாவடியை கடக்க சராசரியாக 15 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Annual Fastag-க்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த பாஸ் கார், ஜீப் மற்றும் வேன்கள் போன்ற வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.வணிக மற்றும் சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு பொருந்தாது.

ஒரு பயனர் எவ்வளவு சேமிக்கலாம்?

ஒரு சுங்க சாவடியை கடக்க ஏற்கனவே 50 ரூபாய் உள்ளது. தற்போது 15 ரூபாயாக குறைவதால் 200 சுங்க சாவடிக்கு 7,000 வரை சேமிக்கலாம்.

200 பயணங்கள் மட்டும்?

இத்திட்டம் ஒரு வருடம் என்றாலும் 200 சுங்க சாவடியை கடந்ததும் திட்டம் நிறைவடையும், மீண்டும் புதிய வருடாந்திர பாஸை நீங்கள் வாங்க வேண்டும்.

இத்திட்டத்தை பெற புதிய ஃபாஸ்டேக் வாங்க வேண்டுமா?

இந்த புதிய வருடாந்திர ஃபாஸ்டேக்- ஐ பெற புதிதாக ஃபாஸ்டேக் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக் உடன் இணைத்துக் கொள்ளலாம்.

புதிய ஃபாஸ்டேக் கட்டாயமா?

புதிய வருடாந்திர திட்டம் விருப்பத்தேர்வு மட்டுமே வருடாந்திர பாஸ் திட்டத்தில் சேர விருப்பமில்லை என்றால் பயனர்கள் வழக்கம் போல் Fastag மூலம் பணம் செலுத்தலாம்.

சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 2024 ஆண்டு இறுதி மதிப்பாய்வின் படி இந்தியாவில் டிசம்பர் 1,2024 வரை 10.1 கோடிக்கும் அதிகமான Fastag வழங்கப்பட்டுள்ளன.

  • Sivananthan

    I'm Sivananthan, a passionate Tamil blogger and the founder of Tamil Blogger (tamilblogger.com). Since 2019, I’ve been dedicated to sharing timely and informative content in Tamil on politics, cinema, sports, business, technology, and trending news. My mission is to keep Tamil readers informed, engaged, and empowered through quality writing.

    Related Posts

    அகமதாபாத் விமான விபத்து | விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!!!

    BREAKING: Ahmedabad Airplane Crash: விமான விபத்து.. பலி 242 ஆக அதிகரிப்பு விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் முதற்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இடிபாடுகளில் இருந்து மேலும் பலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை 242 பேர்…

    Read more

    நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)

    நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட்: தமிழகத்தில் நாளை (11/06/2025) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் தமிழக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதம் ஒரு நாள் மின்தடை செய்யப்பட்டு…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

    மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

    அகமதாபாத் விமான விபத்து | விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!!!

    அகமதாபாத் விமான விபத்து | விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!!!

    நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)

    நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)

    12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் (10/06/2025) | Today Rasi Palan

    12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் (10/06/2025) | Today Rasi Palan

    மும்பை அருகே நெரிசல் நிறைந்த லோகல் இரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி!!! பலர் படுகாயம்…

    மும்பை அருகே நெரிசல் நிறைந்த லோகல் இரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி!!! பலர் படுகாயம்…

    மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அறிவிப்பு! தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை!

    மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அறிவிப்பு! தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை!