பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மூலம் மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர விரும்பும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையினை 60 வயது வரை செலுத்தி இந்த பென்ஷன் திட்டத்தில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையுடன் மத்திய அரசும் குறிப்பிட்ட தொகையினை உங்களுடைய கணக்கில் வரவு வைக்கும்.
தகுதிகள்:
- மாத சம்பளம் 15,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
- 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- அரசு பணியாளராக இருக்கக் கூடாது.
- வருமான வரி செலுத்தும் நபராக இருக்கக் கடாது.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வங்கி கணக்கு எண் அட்டை
- e-shram அட்டை
மேற்கண்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து முதல் தவணை செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
கீழே வயதுக்கு ஏற்ப மாதம் செலுத்த வேண்டிய ப்ரீமியம் தொகையும், அதற்கு மத்திய அரசு செலுத்தும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது.
