Today Rasipalan, today panchangam

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் (10/06/2025) | Today Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Today Panchangam Tamil :

Today Rasipalan, today panchangam
நாள்ஜீன் 10, 2025
கிழமைசெவ்வாய் கிழமை
தமிழ் வருடம்விசுவாவசு
தமிழ் மாதம் வைகாசி
நாள்27
ஆங்கில தேதி10
ஆங்கில மாதம் ஜூன்
வருடம்2025
நட்சத்திரம்:

இன்று மாலை 06:59 வரை அனுஷம் பின்பு கேட்டை.

திதி:

இன்று பிற்பகல் 12:26 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி.

யோகம்:

சித்த யோகம்

நல்ல நேரம் காலை07:30 – 08:30
நல்ல நேரம் மாலை 04:30 – 05:30
ராகு காலம் காலை03:00 – 04:30
எமகண்டம் மாலை09:00 – 10:30
குளிகை காலை12:00 – 01:30
கெளரி நல்ல நேரம் காலை10:30 – 11:30
கெளரி நல்ல நேரம் மாலை 07:30 – 08:30
சூலம்வடக்கு
சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan in Tamil (10/06/2025)

மேஷம் ராசி:

சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட தூரப் பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி பிரச்சனைகளால் செயல்களில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

ரிஷப ராசி:

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரீதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிதுனம் ராசி:

குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் அமையும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

Read More  ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கடகம் ராசி :

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சிம்மம் ராசி:

வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். புதிய வியாபாரம் நிமித்தமான கடன் சார்ந்த உதவிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தைத் தரும். உத்தியோகம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

கன்னி ராசி:

பயணங்களின் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு ஏற்படும். குறுந்தொழில் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

துலாம் ராசி:

வருவாய் குறித்த எண்ணங்கள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பைத் தரும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்த நிலைகள் விலகும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விருச்சிகம் ராசி:

சிறுதூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

தனுசு ராசி:

மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் புதிய நம்பிக்கை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

Read More  மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகரம் ராசி:

இழுபறியான வரவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வழக்குகளில் மாற்றங்கள் ஏற்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கும்பம் ராசி:

அனுபவ செயல்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலப் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆதரவு மேம்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த தடைகள் குறையும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மீனம் ராசி:

எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாதப் பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *