Re-NEET UG 2026 Admit Card விரைவில் வெளியாக உள்ளது. Hall Ticket download செய்வது எப்படி, direct website link, required details மற்றும் exam instructions அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆண்டு Neet UG 2026 தேர்வு முதலில் மே 03, 2026 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 22,75,011 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில் 22,05,035 மாணவர்கள் மட்டும் தேர்வை எழுதினர்.
ஆனால் தேர்வு தொடர்பாக கேள்வித்தாள் கசிவு (Paper Leak) மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்க NTA (National testing agency) தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த முடிவு செய்தது.
நீட் வினாத்தாள்களை முதன்முறையாகக் கொண்டு செல்வதற்காக இந்திய விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக என்.டி.ஏ தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.
Re-Neet Exam Date 2026
மறுதேர்வு 2026 ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெற உள்ளது.
முக்கிய தகவல்கள்
- பழைய ஹால் டிக்கெட் பயன்படுத்தக் கூடாது.
- புதிய விண்ணப்பம் செய்ய தேவையில்லை.
- ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதிய Admit card / Hall Ticket பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- தேர்வு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று தேவைப்படும் ஆவணங்கள்
- NEET UG 2026 மறுதேர்வு அனுமதி அட்டை
- ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு (ஏதேனும் ஒன்று)
- ADMIT CARD-ல் உள்ளதைப் போன்ற ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
How to Download Re-NEET UG Admit Card 2026

- Official website https://neet.nta.nic.in/ செல்லவும்.
- “Re-NEET UG 2026 Admit Card Download” என்பதை கிளிக் செய்யவும்.
- Application Number + Password உள்ளிடவும்.
- Submit செய்யவும்.
- Admit Card Download செய்து Print எடுத்துக் கொள்ளவும்.
அனுமதி அட்டை எப்போது கிடைக்கும்?
NTA ஆனது, NEET UG 2026 தேர்வுக்கான அனுமதி அட்டைகளை இன்று, ஜூன் 14, 2026 அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு மையங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்
- தேர்வு அறைக்குள் கைபேசி, ஸ்மார்ட்வாட்ச், புளூடூத் சாதனங்கள், மின்னணு உபகரணங்கள், பணப்பை, பைகள், கணிப்பான் மற்றும் வீட்டிலிருந்து கொண்டு வரும் எழுதுபொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
- தெளிவான (Transparent) தண்ணீர் பாட்டில் மட்டும் அனுமதிக்கப்படும்.
- மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட எந்தவொரு ஆவணமும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
Admit Card for NEET (UG) – 2026 Re-Examination
| Admit Card for NEET (UG) – 2026 | Click here |
| Admit Card for NEET (UG) – 2026 Re-Examination (alternate) | Click here |