மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள், தேர்வு செய்யும் முறை பணியிடம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| வேலையின் பெயர் | உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் |
| வேலை இடம் | மதுரை, தமிழ்நாடு |
| மொத்த காலி பணியிடங்கள் | 01 |
| விண்ணப்பங்கள் பெறப்படும் காலம் | 04.11.2025 முதல் 21.11.2025 வரை |
| விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 21.11.2025 |
சம்பளம்:
மாதம் ரூபாய் 11,916
மொத்த காலிப்பணியிடங்கள்:
01
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட கல்விக் குழுமத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
- பணி அனுபவமுள்ள நபருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
வயது வரம்பு:
42 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல்மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மூன்றாவது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை – 625 020) என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
குறிப்பு:
முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலும், தாமதமாகவும் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| Telegram Channel (Free Job Alert) | Click Here |