தமிழக ஊரக திறனாய்வு தேர்வு | 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்!!!
தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு, அரசு தேர்வு இயக்கத்தால் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (1991-1992) கல்வி ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டிற்க்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 29.11.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள்) ஆண்டிற்கு தலா ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கும் மொத்தம் 4000 வழங்கப்படும்.
2025-2026 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள (சென்னை தவிர்த்து) ஊரக பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 28.10.2025 முதல் 04.11.2025 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.10 சேர்த்து சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் 04.11.2025 வரை சமர்ப்பிக்கலாம்.