பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது | TN 10th Result 2025 Out…

TN 10th class exam result 2025 out

TN 10th Result 2025 Out:

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.12,480 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 4 இலட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 இலட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என மொத்தம் 9 இலட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் தேர்வை எழுதினர்.

அதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியாகின.

இன்று காலை 09:00Am மணிக்கு பத்தாம் வகுப்பு, மதியம் 02:00Pm மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவிப்பும் செய்திருந்தது.

தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

Read More  தமிழ்நாடு அரசு 10,11 வது வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேதி அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *