Thursday, December 26, 2024
HomeNews71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி

71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி

கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது.

தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆப்பிரிக்க ராட்சத எலி “மகவா” தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular