Saturday, December 7, 2024
HomeCinemaகம்மல் அணிந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

கம்மல் அணிந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். வலைத்தளங்களில் அடிக்கடி அறைகுறை உடையில் ஆபாச படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதன் மூலம் தனது வலைத்தள பக்கங்களிலும் வணிக பொருட்களை அறிமுகம் செய்து பணம் சம்பாதிக்கிறார். கிம்கர்தாஷியான் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 400 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

கிம் கர்தாஷியான்

இந்த நிலையில் கிம்கர்தாஷியான் காதில் வடமொழி ஓம் முத்திரை டிசைன் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்துக்கள் புனிதமாக கருதும் ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பலரும் அவருக்கு கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular