
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு:

தமிழ்நாட்டில் ஜீலை – 01, 2025 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2022 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து மின்சார கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணத்தை 3.16% வரை உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே வரிச்சுமையால் தவித்து வரும் நிலையில் இந்த மின்கட்டண உயர்வால் மக்கள் பல்வேறு இன்னல்கள் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.