TNPSC LATEST NEWS 2026

TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – புதிய அப்டேட் வெளியீடு!

TNPSC Latest News 2026

தமிழக அரசு துறைகளில் அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி அனைத்துப் போட்டித் தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் TNPSC தலைவர் எஸ்.கே பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், அரசுத்துறை பணி நியமனங்கள் எந்த வகையில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், அரசுத் துறைகளில் அதிக எண்ணிக்கையிலான காலி பணியிடங்களில் நிரப்ப மனிதவளத்துறை அறிவுரை வழங்கியுள்ளது மற்றும் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி யிடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் TNPSC, 2026 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் அறிவிப்பாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு (நேர்முக தேர்வு இல்லாத பதவிகள்) கடந்த மே 20-ம் தேதி அறிவிப்பு வெளியாகி, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும். என்னென்ன பதவிகள் மற்றும் எவ்வளவு காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் அறிவிப்பில் இடம் பெறும். இதேபோல மற்ற தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு, தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகளும் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு பல்வேறு அரசு பல்கலைக்கழகங்களிடமிருந்து ஆசிரியர் அல்லாத பதவிகளில் காலி பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. பதவி நிலைக்கு ஏற்ப பணியிடங்கள் ஒருங்கிணைந்த குரூப்பு 2 தேர்விலோ அல்லது குரூப் 2ஏ தேர்விலோ சேர்க்கப்பட உள்ளன.

ஏற்கனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விரைவில் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வாயிலாக படிப்படியாக நிரப்பப்படும் என்றும் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Read More  ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *