Saturday, September 23, 2023
HomeWomenஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை சாப்பிடலாம்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை சாப்பிடலாம்

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அனைவரும் சந்திக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். அதுவும் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் 100-யில் 80% பெண்கள் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனையை அதிகம் சந்திக்கின்றனர். இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஏற்படுவது, ஹார்மோனின் சமமற்ற நிலை இவையெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.

இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் அதிக சிக்கல் ஏற்படும். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சரியான அளவில் புரதச் சத்து உணவுகள், இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்ற நிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்.

சீரகம்:

சீரகம் இந்த மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அதாவது சீரகம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். மட்டல் போன்ற மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சீரகம் உதவுகிறது.

எனவே இந்த சீரகத்தை இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் இந்த பாணத்தை பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும். இந்த மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

எள்ளுருண்டை:

இந்த மாதவிடாய் பிரச்சனை சரியாக அல்லது மாதவிடாய் சரியாக வருவதற்கு எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

மாதவிடாய் பிரச்சனை சரியாக:

சிலருக்கு பீரியட்ஸ் 3 அல்லது 4 நாட்கள் வரும். அப்போது அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும். அதிலும் சிலருக்கு கட்டிக்கட்டியாக இரத்த போக்கு ஏற்படும். அந்த சமயத்தில் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து அதனுடன் உலர்திராட்சையை கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதினால் அதிகப்படியான உதிரப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சனை சரிசெய்துவிட முடியும். அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான பீரியட்ஸ் இருக்காது. இதனைத் தவிர்க்க மற்றும் மாதவிடாய் சரியாக வர இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும்.

பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular